டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
“கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தை வாசித்தார். அதில், “பா.ஜ.க.வினரும் எனது சகோதர, சகோதரிகளே. அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வருவார்; அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
கவிதாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
இதனிடையே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து, வருகின்ற மார்ச் 25- ஆம் தேதி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. மேலும், கட்சித் தலைவர்களுக்கு எதிரான வழக்கில் எந்த ஆதாரத்தையும் அமலாக்கத்துறையால் சமர்ப்பிக்க முடியவில்லை என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.