பெங்களூருவில் குடிநீர் குழாய்களுக்கு குடிநீர் கட்டுப்பாட்டு கருவியைப் பொருத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. கூட்டணிக்கு சென்ற எம்.பி…. வழக்கை முடித்து வைத்த சி.பி.ஐ.!
பெங்களூரு குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். வீடுகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும். வரும் மார்ச் 31- ஆம் தேதிக்குள் குடிநீர் இணைப்புக் குழாயில் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தாவிட்டால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!
பெங்களூருவில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், குழாய்களில் கட்டுப்பாட்டு கருவியை பொருத்தினால் தண்ணீர் பயன்படுத்தும் அளவை கட்டுப்படுத்தலாம் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஐ.டி. நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தியுள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கர்நாடகா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.