பாரத ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் வழங்கினார்.

நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்!

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பாரத ரத்னா விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், கற்பூரி தாக்கூர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

பெங்களூரு அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி!

எல்.கே.அத்வானி தவிர மற்றவர்களுக்கு அவர்களின் மறைவுக்கு பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மறைந்த தலைவர்களின் சார்பில் அவர்களின் குடும்பத்தினர் ‘பாரத ரத்னா’ விருதைப் பெற்றுக் கொண்டனர்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img