காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் மல்லிகார்ஜீன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாவது: நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1 லட்சம், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் வேண்டுமா? என்பதை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும், 10 சதவீத இட ஒதுக்கீடு எந்த விதமான பாகுபாடுமின்றி அனைத்து சாதியினருக்கும் வழங்கப்படும்.

பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறை அகற்றப்படும், 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50%ல் இருந்து உயர்த்தப்படும், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும், மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். எனக் கூறப்பட்டுள்ளது.

 

Video thumbnail
அதிமுக கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றுதான்
00:57
Video thumbnail
திருமாவளவன் பிறந்த நாள் | ராப் இசைப் பாடகர் வேடனுக்கு அழைப்பு
01:01
Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img