கவிதாவின் அமலாக்கத்துறை காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கவிதாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரினர். இதையடுத்து, கவிதாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, நீதிமன்றத்தில் கவிதா கூறியதாவது, “அரசியல் ஆதாயத்திற்காக புனையப்பட்ட பொய் வழக்கு என் மீது பதிவுச் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
16 ஆண்டுகளுக்கு பிறகு ரெங்கநாதர் பிரம்மோற்சவத்தில் இடம் பெற்ற தேரோட்டம்!
அதேபோல், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாகவும் கவிதா தெரிவித்துள்ளார்.