நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று 2ம் கட்டமாக 13 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மக்களவை தேர்தலில் 2ம் கட்டமாக கர்நாடகா, கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அதாவது கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும், கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிரா 8, உத்தரபிரதேசம்8, மத்தியபிரதேசம்.6, மேற்கு வங்கம் 3, அசாம் 5, பீகார் 5, சத்தீஸ்கர் 3, ஜம்மு, மணிப்பூர், திரிபுராவில் தலா ஒரு தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மறைவால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 11 மணி நிலவரப்படி 13 மாநிலங்களில் பதிவான வாக்குகளான, அசாமில் 27.43%, பீகார் 21.69%, சத்தீஸ்கர் 35.47%, சத்தீஸ்கர் 35.47%, ஜம்மு காஷ்மீர் 26.61%, கர்நாடகா 22.34%, கேரளா 25.61% மத்தியபிரதேசம் 28.51%, மகாராஷ்டிரா 18.83%, மணிப்பூர் 33.22%, ராஜஸ்தான் 26.84%, திரிபுரா 36.42%, உ.பி. 24.31% மேற்கு வங்கம் 31.25%, வாக்குகள் 11 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளன.