மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது
இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தகுதி தேர்வு நாளை நடைபெறுகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் 2024-25 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றை லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை கடந்த 2 ஆம் தேதி முதல் மாணவர்கள் முகமையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது.
தேர்வு குறித்து சந்தேகங்கள் எழுந்தால் 01140759000 என்ற எண்ணிலோ அல்லது neet@ nta.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு 24 மணி நேரமே உள்ளதால் மாணவ மாணவிகள் முழு வீச்சில் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.