கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்குள் கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரைத் துப்பாக்கியால் சுட்டு 3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. கூட்டணிக்கு சென்ற எம்.பி…. வழக்கை முடித்து வைத்த சி.பி.ஐ.!
ஊர்கஹள்ளி என்ற கிராமத்தில் வசித்து வரும் கங்கையா என்பவரின் பண்ணை வீட்டிற்கு அடையாளம் தெரியாத இருநபர்கள் வந்துள்ளனர். குடிநீர் கேட்பது போல வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் கங்கையா மகள் புஷ்பலதாவை தள்ளிவிட்டுள்ளனர்.
இதில் கீழே விழுந்த புஷ்பலதா கூச்சலிட்டுள்ளார். அப்போது புஷ்பலதாவை விரட்டி உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிக்க முயன்றனர். அதற்குள் சத்தம் கேட்டு தடுக்க முயன்ற கங்கையாவை நோக்கிக் கொள்ளையர்கள் இருமுறை துப்பாக்கியால் சுட்டுத் தப்பித்துச் சென்றனர். இதில் காலில் காயமடைந்த கங்கையா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புகாரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உயரதிகாரிகள், தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.