பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த சில மாதங்களிலேயே அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மீதான ஏர் இந்தியா முறைகேடு வழக்கை சி.பி.ஐ. முடித்து வைத்துள்ளது.
பாரத ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, அஜித் பவார் அணி, ஏக்நாத் ஷிண்டே அணி ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எம்.பி.யாக இருந்த பிரபுல் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அஜித் பவாருடன் இணைந்து செயல்பட்டார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் அணிக்கே சொந்தமான நிலையில், மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்டு பிரபுல் படேல் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரபுல் படேல் மீதான ஏர் இந்தியா முறைகேடு வழக்கை சி.பி.ஐ. முடித்து வைத்துள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கை பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த சில மாதங்களிலேயே சி.பி.ஐ. முடித்து வைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் குழு- நடிகர் ரஜினி வாழ்த்து
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக பிரபுல் படேல் பதவி வகித்தார். அப்போது எமிரேட்ஸ், ஏர் அரேபியா மற்றும் கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் விமானசேவைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.