நாட்டில் விலைவாசி கட்டுக்குள் இருப்பு- நிர்மலாக சீதாராமன்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாட்டில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலாக சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் விலைவாசி கட்டுக்குள் இருப்பு- நிர்மலாக சீதாராமன்

நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை  மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அவரது பட்ஜெட் உரையில்,  நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி  என்று குறிப்பிட்டார்.

2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் எனவும்,  விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் பின்னடைவு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பட்ட மனித வளம், சமூக நீதி,  உற்பத்தி மற்றும் சேவைகள்,  நகர்ப்புற வளர்ச்சி , ஆற்றல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் ஆகிய 9 அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி மின்னுகிறது எனவும் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினார். மேலும் பட்ஜெட் உரையில், அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக ₹2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது.

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் ‘பிஎம் கரீப் அன்ன யோஜனா’ திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கத்துக்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு!

வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ₹1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு .அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள்.

உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும். பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதி மற்றும் பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
Video thumbnail
பாஜகவுக்கு, திமுக மீது ஏன் அவ்வளவு வன்மம்
00:54
Video thumbnail
2026 தேர்தலில் புதிய கூட்டணி | விஜய் - சீமான் - அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு?
00:46
Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
Video thumbnail
அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்
00:56
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img