ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்- உங்கள் மன்னிப்பை ஏற்க முடியாது.

உரிய அறிவியல் பூர்வ ஆதாரங்கள் இல்லாமல் பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரப்படுத்தியதற்கு எதிராகவும், ஆலோபதி கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டதிற்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.

ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது - உச்ச நீதிமன்றம்

கடந்த 2023 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையின் போது தவறாக மக்களை திசை திருப்பும் விளம்பரங்களை ஒளிபரப்பினால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து வந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பொருட்படுத்தாமல் பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து விளம்பரத்தை ஒளிபரப்பி வந்தது.

இதனையடுத்து பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சாரியா பாலகிருஷ்ண ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸ் மீதும் பதில் அளிக்காத நிலையில் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சாரியா பாலகிருஷ்ண ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்

இவ்வழக்கில் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகினார். வழக்கு விசாரணை நீதிபதி ஹிமா கோலி அமர்வில் நடைபெற்ற போது, பதஞ்சலி நிறுவனம் தரப்பில் அஜரான வழக்கறிஞர் பதஞ்சலி நிறுவனத்தின் ஊடகப்பிரிவு செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளம்பரப்படுத்தியதாகவும் அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

https://www.mugavari.in/march-month-metro-passengers/

அதற்கு நீதிபதிகள் பதஞ்சலி நிறுவனத்தின் ஊடகப்பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா? என கேள்வி எழுப்பினர். அதே நேரத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் மன்னிப்பை ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள், எதன் அடிப்படையில் பதஞ்சலி நிறுவன மருந்து மற்றும் மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? எனவும், அதற்கான அறிவியல் பூர்வ நிறுவனம் உள்ளதா? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் ஏதேனும் கோரிக்கை வைத்தீர்களா? என்றும் கேள்வி எழுப்பினர்.

அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது இந்த விவகாரத்தில் எப்படி செய்தியாளர் சந்திப்பை பதஞ்சலி நிறுவனம் நடத்தியது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தங்களுக்கு மன்னிப்பு தேவையில்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் செய்தியாளர் சந்திப்பை மீறி கருத்துக்களை தெரிவித்து இருப்பது சட்ட விரோதம் என கூறிய நீதிபதிகள் தாங்கள் யாருக்கும் பாடம் புகழ்த்துவதற்காக நீதிமன்றத்தில் அமரவில்லை என கூறினர்.

இதனை எடுத்து வழக்கை ஏப்ரல் 10ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் எதிர்மனுதாரர்கள் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

Video thumbnail
மாறுகிறது களம்..Elon musk கொடுத்த Shock.அடுத்த பிரதமர் ராகுல் காந்தியை சந்திக்க Elon musk திட்டம்
02:44
Video thumbnail
மீண்டும் கில்லி ரிலீஸ்... ரசிகர்கள் கொண்டாட்டம்... | vijay | tvk | rerelease | gilli movie |
08:05
Video thumbnail
EVM மிஷினில் தில்லு முல்லு... வியாசர்பாடியில் சிறிது நேரம் வாக்கு பதிவு நிறுத்தம்... | bjp | tmc |
08:07
Video thumbnail
வாக்கு நம்ம உரிமை - சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan | vote | election | voting rights |
00:55
Video thumbnail
கையில் பிளாஸ்திரியுடன் நடிகர் விஜய்.... | vijay | vote | election | GOAT |
00:12
Video thumbnail
நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், ரஜினி வாக்களிப்பு... | vijay | sivakarthikeyan | rajinikanth |
05:27
Video thumbnail
தி.மு.க- 30, அ.தி.மு.க- 2, பா.ஜ.க- 0, மற்றவை இழுபறி... கரூர், விருதுநகர் வெற்றி - ஈரோடு போட்டி ..
12:20
Video thumbnail
ABP & C Voter's நடத்திய புதிய கருத்து கணிப்பு... பரபரப்பு தகவல்... யாருக்கு வெற்றி ? | bjp | cong |
01:58
Video thumbnail
297 இந்திய கூட்டணிக்கு வாய்ப்பு.வட மாநிலங்களில் புதிய திருப்பம் #modi #congress #rahulgandhi #bjp
08:29
Video thumbnail
கெஜிரிவால் கைது... சர்வதிகாரத்தின் தொடக்கம்.... #modi #bjp #kejiriwal
00:39
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img