இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கும் திட்டத்தை டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தனது புதிய கார் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு இருந்த டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் கடந்த வாரம் இந்திய பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் இந்தியா புறப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக தனது பயணத்தை ரத்து செய்த மஸ்க் நடப்பாண்டின் பிற்பகுதியில் இந்தியா வரும் வாய்ப்பினை எதிர்பார்த்துள்ளதாக கூறியிருந்தார்.
தனது அமெரிக்க தொழிற்சாலைகளிலேயே மலிவு விலை மின்சார கார்களை உற்பத்தி செய்த நடப்பாண்டின் இறுதியில் சந்தைக்கு கொண்டுவர டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த மலிவு விலை கார்களைத்தான் டெஸ்லா இந்தியாவிலும் மெக்சிகோவிலும் தயாரிக்க திட்டமிட்டிருந்தது.
வெளிநாடுகளில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் முடிவினை மஸ்க் நிறுத்தி வைத்துள்ளதற்கு விற்பனை குறைவு அதிகரிக்கும் செலவினங்கள், டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி ஆகியவையே காரணங்களாக கூறப்படுகிறது.
இதனிடையே அமெரிக்க தொழிற்சாலைகளில் இருந்து 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மாஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…