“ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் இல்லை; வாழ்க்கை லட்சியம்” – ராகுல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

“ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் இல்லை; வாழ்க்கை லட்சியம்” – ராகுல்

இந்தியா முழுமைக்குமான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தனது வாழ்க்கையில் அலட்சியம் என்றும் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் ராகுல் காந்தி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

"ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் இல்லை; வாழ்க்கை லட்சியம்" - ராகுல்

டெல்லியில் நடைபெற்ற சமூக நீதிக்கான கருத்தரங்கில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் தீவிரமான அரசியல்வாதி கிடையாது என்றும் பாஜகவினர் விமர்சிப்பதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பெரும்பான்மையான மக்கள் பிரச்சனைகளுக்காக பேசுவது தீவிர அரசியல் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

 

"ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் இல்லை; வாழ்க்கை லட்சியம்" - ராகுல்

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விராட் கோலி உடன் பேசுவது தான் தீவிர அரசியலா என்றும் மோடியை மறைமுகமாக ராகுல் சாடினார்.

70 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ள போகும் முக்கியமான நடவடிக்கையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு இருக்கப் போகிறது என்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அரசியலுக்காக நடத்தவில்லை அதுதான் தனது வாழ்க்கையின் லட்சியம் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

"ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் இல்லை; வாழ்க்கை லட்சியம்" - ராகுல்

அனைத்து இடங்களிலும் தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் எனக் கூறிக் கொண்டிருந்த மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச தொடங்கியவுடன் ஜாதிகளே இல்லை எனக் கூறிய இரட்டை வேடம் போடுவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

பெரும் பணக்காரர்களுக்கு மோடி அளித்த 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடியை 90 சதவீத இந்தியர்கள் பயன்பெறும் வகையில் பிரித்து பயன்படுத்துவதே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் லட்சியம் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

https://www.mugavari.in/news/politics/lok-sabha-elections-phase-2-voting-underway/1878

16 லட்சம் கோடியை மக்களுக்காக பயன்படுத்தினால் சமையல் எரிவாயு சிலிண்டரை 400 ரூபாய்க்கு வழங்க முடியும் என்பது உள்ளிட்ட நன்மைகளையும் ராகுல் பட்டியலிட்டு உள்ளார்.

Video thumbnail
அதிமுக கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றுதான்
00:57
Video thumbnail
திருமாவளவன் பிறந்த நாள் | ராப் இசைப் பாடகர் வேடனுக்கு அழைப்பு
01:01
Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img