கேரளாவில் ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் கொலை
கேரளாவில் ரயில்வே டிக்கெட் பரிசோதகரை ரயிலில் தள்ளி கொலை – ஒருவர் கைது செய்யப்பட்ட
கேரள மாநிலம் திருச்சூர் அருகே ரயில்வே டிக்கெட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த ஒடிசாவை சேர்ந்த ரயில் பயணியை பாலக்காட்டில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குந்நன்குளம் பார் ஒன்றில் வேலை செய்து வந்தவர். ஒடிசாவை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் பாரில் பணி செய்யும் போது அடிக்கடி குடிபோதையில் இருக்கிறார் என்று புகார் தொடர்ந்து பணியில் இருந்து ரஜினிகாந்தை விடுவித்து விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நேற்று இரவு திருச்சூர் ரயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளம் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பயணம் செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்த சக பயணிகளிடம் அவர் அநாகரிகமாக செயல்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பயணிகள் ரயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் வினோதிடம் புகார் அளித்துள்ளனர். அவர் வந்து பயணியிடம் விசாரித்த போது குடிபோதையில் இருந்துள்ளார்.
மேலும் இவரிடத்தில் பயன டிக்கெட்டும் இல்லை. இதை தொடர்ந்து அடுத்த ரயில் நிலையத்தில் இவரை இறக்கி விடுவதற்காக ஓடிக்கொண்டிருந்த ரயிலில் கதவருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது திடீரென்று டிக்கெட் பரிசோதகர் வினோத்தை ரயிலில் இருந்து கீழே தள்ளி உள்ள இதில் நிலை தடுமாறி ரயிலில் இருந்து விழுந்த டிக்கெட் பரிசோதகர் எதிரே வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பயணிகள் அளித்த புகாரை தொடர்ந்து டிக்கெட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த ஒடிசாவை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவனை பாலக்காட்டில் வைத்து ரயில்வே போலீசார் கைது செய்து தற்போது திருச்சூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை ரயில் பயணி ஒருவர் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிக்கெட் பரிசோதகராக உள்ள வினோத் குமார் மலையாள படம் ஒன்றில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.