இந்த படத்தை புதுமுக இயக்குனர் கே ஜே சுப்ரமணி இயக்கியிருக்கிறார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. சாம் சி எஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார். கோகுல் பினாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த அக்டோபர் 11 சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகர் ஜீவா செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “நீண்ட நாள் கழித்து ஒரு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவிற்கு வந்திருக்கிறேன். பிளாக் படத்தின் வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இன்னும் பல வெற்றி படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய டிஷ்யூம் படத்தில் ‘கைத்தட்டலுக்கு என்கிற ஜாதி’என்ற வசனம் ஒன்றே பேசி இருப்பேன். அது மாதிரி பாராட்டு கிடைப்பதற்காக தான் தாங்கள் பல முயற்சிகள் எடுக்கிறோம்.
இன்னும் நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு வந்திருக்கிறது. இது மாஸ் படமோ காமெடி படமோ இல்லை. இந்த படத்துல அடுத்தடுத்து என்ன இருக்கும் என்ற மாதிரியான படம் தான் இது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சிகளை படமாக்குவோம். எனக்கே படம் பார்க்கும்போது தான் கோர்வையாக புரிந்தது. மக்களுடன் பார்க்கும்போது எனக்கே புதிதாக இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…