கல்வி தான் கடவுள் ‘சார்’ படத்தின் விமர்சனம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கல்வி தான் கடவுள் ‘சார்’ படத்தின் விமர்சனம்!விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் திரைப்படம் இன்று (அக்டோபர் 18) வெளியாகி உள்ளது. இந்த படத்தை போஸ் வெங்கட் இயக்க கிராஸ் ரூட் நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. மாங்கொல்லை எனும் ஊரில் 1960 முதல் 80 காலகட்டத்தில் நடைபெறும் கதையாக இந்த படம் நகர்கிறது. இதன்படி இந்த படத்தில் விமல் ஞானம் என்ற வாத்தியாராக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தனது தாத்தா கட்டிய பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றி அங்குள்ள மாணவ மாணவியர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார் விமல். உயர் ஜாதியை சேர்ந்த தலைவரான ஜெயபாலன் அனைத்து மக்களுக்கும் கல்வி அறிவு கிடைத்துவிட்டால் நம்மால் அவர்களை அடிமையாக்க முடியாது என்ற நோக்கத்தில் தெய்வ நம்பிக்கையை புகுத்தி அந்தப் பள்ளிக்கூடத்தையே இடிக்க திட்டம் போடுகிறார். அந்தப் பள்ளிக்கூடத்தை இடிக்க விடாமல் போராடுகிறார் விமல். அந்தப் பள்ளிக்கூடத்தை இடிக்க விடாமல் தடுத்தாரா? அங்குள்ள மக்களுக்கு கல்வி கிடைத்ததா? என்பது படத்தின் மீதி கதை.கல்வி தான் கடவுள் ‘சார்’ படத்தின் விமர்சனம்!

நடிகர் விமல் வாகை சூடவா படத்திற்கு பிறகு இந்த படத்தில் வாத்தியாராக நடித்திருக்கிறார். வழக்கம்போல் தனது நடிப்பினால் படத்தை தாங்கி பிடித்துள்ளார். விமலுக்கு ஜோடியாக சாயாதேவி கண்ணன் நடித்திருக்கும் நிலையில் தனக்கான கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். வில்லனாக வரும் ஜெயபாலன் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். படத்தின் முதல் பாதி நகைச்சுவை, காதல் என நகர்ந்து செல்கிறது. ஒரு சில இடங்களில் தேவையில்லாத காட்சிகள் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இரண்டாம் பாதியில் சூடுபிடிக்க தொடங்கிய இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதாவது கல்வி எந்த அளவிற்கு முக்கியம் என்பதை கூறியுள்ளனர். கல்வியை பொறுத்தவரையில் மூடநம்பிக்கையை யார் திணித்தாலும் அவர்கள் சாமி இல்லை ஆசாமி தான் என்றும் கல்விதான் கடவுள் என்பதையும் அழகான திரைக்கதையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் இயக்குனர். சித்துக்குமாரின் இசை யும் இனியன் ஜெ ஹரிஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. முதல் பாதையில் சில தொய்வுகளை சரி செய்திருந்தால் படம் இன்னும் அருமையாக வந்திருக்கும். மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கும் திரைப்படம் தான் சார்.

Video thumbnail
சுயமரியாதை இயக்கத்தால் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு
00:43
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img