மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயிலின் சேவை மீண்டும் தொடக்கம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கனமழையால் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைக்கப்பட்டதை அடுத்து 2 நாட்களுக்கு பின்னர் மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு கனமழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த அக்டோபர் 16, 17ஆம் தேதிகளில் மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், கனமழையால் மலைரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவுகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததாலும், மழையின் தீவிரம் குறைந்ததாலும் மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலைரயில் சேவை 2 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இன்று தொடங்கும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, மேட்டுப்பாளையம் – உதகை மற்றும் உதகை – மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட மலை ரயிலில், ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.

 

Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
Video thumbnail
பாஜகவுக்கு, திமுக மீது ஏன் அவ்வளவு வன்மம்
00:54
Video thumbnail
2026 தேர்தலில் புதிய கூட்டணி | விஜய் - சீமான் - அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு?
00:46
Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img