வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக். 15) விடுமுறை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.