spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக – அடையாறு கால்வாயை ஆய்வு செய்த அதிகாரிகள்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் உத்தரவின் படி அடையாறு கால்வாயை ககன் தீப் சிங் பேடி ஆய்வு செய்துள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடையாறு கால்வாயை வருவாய் மற்றும் இணைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பொன்னையா உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் அடையாறு கால்வாய்களை கூடுதல் தலைமைச் செயலாளர் ககந்தீப் சிங் பேடி மற்றும் ஊராகத் வளர்ச்சித்துறை செயலாளர் பொன்னையா ஆய்வு செய்துள்ளனர்.அப்போது அங்கிருந்த நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கால்வாய் குறித்து கேட்டரிந்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ளது.வடகிழக்கு பருவமழையை ஒட்டி முதலமைச்சர் உத்தரவின் படி அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணிகளை தொடங்கியுள்ளனர் எனவும் திருமுடிவாக்கத்தில் அடையாறு செல்லும் பாதையில் கால்வாய் வடிகால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் முழுமை அடைந்த கால்வாய் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய நேரில் வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக – அடையாறு கால்வாயை ஆய்வு செய்த அதிகாரிகள்.செம்பரம்பாக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீர் அடையாறில் நிரம்பி வெளியேறும் பகுதியில் இந்த வடிகால் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முடிவடைந்த வடிகால் பயனளிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தூய்மை பணியாளரை காரில் அழைத்துச் சென்ற தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ்
00:55
Video thumbnail
மதுரை நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
01:08
Video thumbnail
நடிகர் விஜயை கண்டித்து அதிமுகவினர் போஸ்டர்
00:40
Video thumbnail
77வது குடியரசு தினத்தில் 4 சிமெண்ட் மூடைகள்! Yoke–Farmers–Zerchers Walk சாதனை | குமரி மாவட்ட கண்ணன்
01:17
Video thumbnail
அம்பத்தூர்- மேனம்பேடு சாலையில் திடிரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்
00:58
Video thumbnail
77வது குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
01:11
Video thumbnail
சென்னை குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் பாடலுக்கு மாணவிகள் நடனம்
02:03
Video thumbnail
சாதனைகள், வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:04
Video thumbnail
77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்
01:28
Video thumbnail
நாங்கள் தான் மீண்டும் வருவோம்.. - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
01:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img