பத்திரப்பதிவு கட்டணம் உயர்வை குறித்து – காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு வகையான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது
பல்வேறு வகையான பிரிவு ஆவணங்களை பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அந்த முத்திரைத்தாள் கட்டணம் மூலம் அரசு கருவூலத்துக்குத் தேவையான வரி கிடைக்கிறது. கடந்த 2001ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக குறிப்பிட்ட சில முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு கட்டணம் உயர்வை குறித்து   – காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை.

ஆவணங்களின் அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ. 4 ஆயிரம் என இருந்ததை ரூ.10 ஆயிரம் எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25 ஆயிரம் என இருந்ததை ரூ.40 ஆயிரம் எனவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200 என இருந்ததை ரூ.1000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம் என இருந்ததை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் எனவும் கடந்த ஆண்டு மாற்றியமைத்து, தமிழக அரசு அறிவித்தது. அதுவரை குறைந்தபட்ச விலையில் இருந்த ரூ.20 பத்திரம், அது தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் தற்போது ரூ.200 வரை அதிகரித்துள்ளது. தற்போது லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இனி, 20 ரூபாய்க்கு பத்திரம் என்பதை வாங்க முடியாது. 20 ரூபாய் பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், பல்வேறு பிரிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில் பத்திரப்பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். 24 வகைகளுக்கான கட்டணம் அதிகரித்ததன் மூலம் 10% முதல் 33% முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது எனவும் கட்டண உயர்வை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பிறகும் அரசு திரும்ப பெறாமல் இருக்கிறது என்றும் கட்டண உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் : 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img