தமிழக மக்கள் அரசின் மீதும் சென்னை மாநகராட்சியின் மீதும் நம்பிக்கை இழந்தாக – ராமதாஸ் . குற்றச்சாட்டு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னையில் 6 சென்டி மீட்டர் மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், இதனால் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை.

சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழைநீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்க வில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை நிலை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது.

தமிழக மக்கள் அரசின் மீதும் சென்னை மாநகராட்சியின் மீதும்  நம்பிக்கை இழந்தாக – ராமதாஸ் . குற்றச்சாட்டு.

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 90% முடிவடைந்து விட்டன, 95% முடிவடைந்து விட்டன என்று ஊடகங்களின் உதவியுடன் வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. உண்மையான அக்கரையை களப்பணிகளில் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டியிருந்தால் 6 செ.மீ மழைக்கு சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது. எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும், எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் நம்மை ஆளும் அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை பொது மக்களுக்கு வர வேண்டும்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மக்களுக்கு அரசின் மீது அந்த நம்பிக்கை இல்லை என்பதையே பொதுமக்கள் தங்களின் மகிழுந்துகளை வேளச்சேரி பாலத்திலும், பள்ளிக்கரணை பாலத்திலும் நிறுத்தி வைத்திருப்பது காட்டுகிறது. மகிழுந்துகளை நிறுத்திவைத்த மக்களில் ஒருவர் கூட தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் தங்கள் பகுதிகளில் மழைநீர் தேங்காது என்று கூறவில்லை.

மாறாக காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை; எங்கள் மகிழுந்துகளை பாலத்தில் தான் நிறுத்துவோம் என்று கூறியிருப்பதன் மூலம் அரசின் மீதான அவர்களின் அவநம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது. பாலங்களின் மீது மகிழுந்துகளை நிறுத்துவது போக்குவரத்தின் நெரிசலை உருவாக்கும் என்பது தான் உண்மை. ஆனாலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலங்களில் மகிழுந்துகள் நிறுத்தப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை.

அதன் பொருள், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் கையாலாகத்தனத்தை மக்கள் புரிந்துகொண்டு விட்டனர் என்பது தான். தொடக்கத்தில் மகிழுந்துகளை நிறுத்தும் மக்களை மிரட்டியும், அபராதம் விதித்தும் அவற்றை அப்புறப்படுத்தும்படி அச்சுறுத்திய சென்னை மாநகரக் காவல்துறை மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, இப்போது பாலங்களில் நிறுத்தப்படும் மகிழுந்துகளுக்கு நாங்கள் அபராதம் விதிக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளனர்.

எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வீண் விளம்பரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்ய வேண்டும். இது நம்மைக் காக்கும் அரசு என்று எண்ணும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
Video thumbnail
பெரியார் மண்ணில் பாஜகவின் மதவேஷம் எடுபடாது
00:54
Video thumbnail
முருகன் மாநாடு - ஆன்மிகமா? அரசியலா?
01:00
Video thumbnail
இந்து அமைப்புகள் இந்துக்களுக்கு செய்த நன்மைகள்?
00:57
Video thumbnail
அடுக்குகளின் இலக்க எண்ணிக்கையை கூறி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 வயது சிறுவன்
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img