அரசியல்

ஜெயலலிதா ஆன்மீகவாதியா  அல்லது இந்துத்துவாதியா –  காங்கிரஸ் எம்பி  திருநாவுக்கரசர்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் அனைத்து வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டவர் முன்னாள் பிரதமர் நேரு என தெரிவித்தார். முல்லை பெரியாறு, காவிரி பிரச்சனைகளில் ஒன்றிய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

ஒன்றிய அரசின் அனுமதியில்லாமல் அண்டை மாநிலத்தில் அணைகள் கட்டும் பணி தொடங்கினால் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கார்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது அதற்கு முன்னதாக பாஜக இருந்தது அதே நிலைதான் அப்போதும் தொடர்தது. கேரளா முல்லைப் பெரியாறு, கர்நாடகாவின் காவேரி நீர் பங்கீடு விவகாரங்களில் ஒன்றிய அரசு நடுநிலைத் தன்மையோடு செயல்பட வேண்டும் , மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

அண்டை மாநில முதல்வர்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதற்காக கூட்டணி மூலமாக பேச முடியாது சட்டபூர்வமாக மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என பேசினார். எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களும் கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர். கடவுள் வழிபாடு கொண்டவர்கள் என்பதாலே ஒருவரை மதவெறி கொண்டவராக பார்க்க முடியாது.  ஜெயலலிதா ஆன்மீகவாதியே தவிர இந்துத்துவா தலைவராக பார்க்க முடியாது என அண்ணாமலையின் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி  திருநாவுக்கரசர் பதிலளித்தார்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி