சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் அனைத்து வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டவர் முன்னாள் பிரதமர் நேரு என தெரிவித்தார். முல்லை பெரியாறு, காவிரி பிரச்சனைகளில் ஒன்றிய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
ஒன்றிய அரசின் அனுமதியில்லாமல் அண்டை மாநிலத்தில் அணைகள் கட்டும் பணி தொடங்கினால் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கார்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது அதற்கு முன்னதாக பாஜக இருந்தது அதே நிலைதான் அப்போதும் தொடர்தது. கேரளா முல்லைப் பெரியாறு, கர்நாடகாவின் காவேரி நீர் பங்கீடு விவகாரங்களில் ஒன்றிய அரசு நடுநிலைத் தன்மையோடு செயல்பட வேண்டும் , மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
அண்டை மாநில முதல்வர்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதற்காக கூட்டணி மூலமாக பேச முடியாது சட்டபூர்வமாக மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என பேசினார். எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களும் கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர். கடவுள் வழிபாடு கொண்டவர்கள் என்பதாலே ஒருவரை மதவெறி கொண்டவராக பார்க்க முடியாது. ஜெயலலிதா ஆன்மீகவாதியே தவிர இந்துத்துவா தலைவராக பார்க்க முடியாது என அண்ணாமலையின் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதிலளித்தார்.