நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளே 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 இடங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
ராஜஸ்தானில் 13 தொகுதிகள், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் தலா 8 இடங்கள், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள், அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 இடங்கள், சத்தீஸ்கரில் மூன்று தொகுதிகள் மற்றும் மேற்குவங்கம், மணிப்பூர், திரிபுரா, ஜம்மு காஷ்மீரில் தலா ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது .
அனைத்து வாக்கு சாவடிகளிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வர வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் கேட்டுக்கொண்டார்.
89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் பிடல் ( Betul ) தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்ற வருகிறது.
இரண்டாம் கட்ட தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சசி தரூர், ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, நடிகை ஹேமமாலினி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
https://www.mugavari.in/news/india-news/pinarayi-vijayan-casting-his-vote/1987
தேர்தல் நடைபெறக்கூடிய மாநிலங்களில் கடுமையான வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மக்கள் அது பற்றி கவலைப்படாமல் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…