spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளே 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு

இந்நிலையில் கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று  வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 இடங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு

ராஜஸ்தானில் 13 தொகுதிகள், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் தலா 8 இடங்கள், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள், அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 இடங்கள், சத்தீஸ்கரில் மூன்று தொகுதிகள் மற்றும் மேற்குவங்கம், மணிப்பூர், திரிபுரா, ஜம்மு காஷ்மீரில் தலா ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது .

அனைத்து வாக்கு சாவடிகளிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வர வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு

89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் பிடல் ( Betul ) தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்ற வருகிறது.

இரண்டாம் கட்ட தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சசி தரூர், ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, நடிகை ஹேமமாலினி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

https://www.mugavari.in/news/india-news/pinarayi-vijayan-casting-his-vote/1987

தேர்தல் நடைபெறக்கூடிய மாநிலங்களில் கடுமையான வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மக்கள் அது பற்றி கவலைப்படாமல் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

Video thumbnail
நான் எந்த அரசியல் கட்சியும் நடத்தவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
01:07
Video thumbnail
பாமக அவசர நிர்வாக குழு கூடவுள்ளது.. வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளோம் - அருள் பேட்டி
01:04
Video thumbnail
தமிழக மக்களின் நலனுக்காக மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க முழு மனதோடு NDA கூட்டணியில் இணைந்துள்ளேன்
02:00
Video thumbnail
விழுப்புரம்: அரசு பேருந்து நடத்துனர் மீது மது போதையில் தாக்குதல்
00:37
Video thumbnail
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்
00:57
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
00:36
Video thumbnail
"ஆளுநரின் செயல் வருத்தமளிக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
01:35
Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img