கட்டுரை

அமரன்’ அறிமுக விழா வீடியோவை வெளியிட்ட படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கின்றாா். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஹே மின்னலே எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகும் எனவும் அதே தேதியில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலைவாணர் அரங்கில் அமரன் திரைப்படத்தின் அறிமுக விழா நடைபெற்றது. இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளது. அதாவது முதல் எபிசோடு இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 10 மணி அளவில் இதன் இரண்டாவது எபிசோடு ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி