இந்த படத்தினை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மேனன், பசுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். கோலார் தங்க சுரங்கத்தில் தங்கம் எப்படி கண்டறியப்படுகிறது என்பது தொடர்பான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இந்த படம் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி செப்டம்பர் 20ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த படம் இதுவரை ஓடிடியில் வெளியாகவில்லை. இதனால் குழப்பம் அடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களை இது தொடர்பாக விவாதித்து வந்தனர். அதைசமயம் திரையரங்குகளில் இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெற்று தராததால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வியாபார தொகையை குறைத்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற விலையிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. ஆகையினால் தங்கலான் திரைப்படம் நவம்பர் மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…