விளையாட்டு

அனல் பறக்கும் ஆட்டம்….டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு!

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 31வது லீக் போட்டியில் கொல்கத்தாvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட்  தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 30 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 31வது லீக் போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 31வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வியுடன் (சென்னைக்கு எதிராக) புள்ளிப்பட்டியலில் 2வது உள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5 வெற்றி ஒரு தோல்வியுடன் (குஜராத்துக்கு எதிராக) புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 14 முறையும் ராஜஸ்தான் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இரு அணிகளும் போராடும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது விளையாடியது. தற்போது வரை கொல்கத்தா அணியானது 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டு இழந்து 41 ரன்கள் எடுத்துள்ளது.

 

Raj

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி