17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 31வது லீக் போட்டியில் கொல்கத்தாvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 30 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 31வது லீக் போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 31வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வியுடன் (சென்னைக்கு எதிராக) புள்ளிப்பட்டியலில் 2வது உள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5 வெற்றி ஒரு தோல்வியுடன் (குஜராத்துக்கு எதிராக) புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 14 முறையும் ராஜஸ்தான் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இரு அணிகளும் போராடும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது விளையாடியது. தற்போது வரை கொல்கத்தா அணியானது 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டு இழந்து 41 ரன்கள் எடுத்துள்ளது.