நான் காலணி துடைக்கிறேன், நீங்கள் கண்ணீரை துடையுங்கள்..” ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக ஷூ பாலிஷ் போடும் பேராசிரியர்
எந்த வேலையும் கேவலம் கிடையாது நாம் எந்த நிலைக்கு இறக்கி போனாலும் அந்த அளவிற்கு முன்னேற முடியும் கல்வியில் பல டிகிரி முடித்து காலனி துடைத்து மக்களை கவரும் பேராசிரியர் ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக சென்னையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்,பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வருகிறார். தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த செல்வகுமார் ,ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். பள்ளியில் தற்போது 239 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 178 மாணவர்களுக்கு மதிய உணவுடன், கல்வி வழங்கி வருகிறார். அந்தக் குழைந்தைகளின் கல்வி, உணவு செலவுக்காக யாரிடமும் உதவி கேட்காத செல்வகுமார், வாரம் தோறும் பல்வேறு ஊர்களுக்கு சென்று பொது இடங்களில் அமர்ந்து, பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்கிறார். அந்த வகையில் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடைஅம்மன் கோவில் சன்னதி தெருவில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் காலணியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.இதனை எடுத்து செய்தியாளரிடம் பேசிய பேராசிரியர் செல்வகுமார் தனியார் கல்லூரி உதவி பேராசிரியராக பணியாற்றி தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் தமிழையும் கற்பித்து வருவதாக தெரிவித்தார். ஐந்து நாட்கள் பணி செய்தாலும் இரண்டு நாட்கள் சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் அன்னை தெரேசா என்ற பள்ளியை நடத்திக் கொண்டிருப்பதாகவும். இந்த பள்ளியில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு என்ற மிகக் குறைந்த கட்டணத்திலும் தந்தை தாயை இழந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கணவனால் கைவிட்ட பெண்களின் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக கல்வி மதிய உணவு உடன் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதுவரை 1838 நாள் மதிய உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.இதற்காக யாரிடம் நன்கொடை பெறக் கூடாது உழைப்பு மூலமாக தர வேண்டும் என்று ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களின் கால்நடைகளை துடைத்து நிதி பெறுவதாக தெரிவித்தார் நான் உங்கள் காலணிகளை துடைக்கின்றேன் நீங்கள் அவர்களின் கண்ணீரை துடையுங்கள் என்ற வாசகத்துடன் துடைத்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக இந்த பணியை செய்து கொண்டிருக்கின்றேன் இந்த பணி மூலமாக குழந்தைகளுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் பட்டப் படிப்புகள் அதிகமாக படித்துவிட்டு காலணி துடைப்பது ஏன் என்று கேள்விக்கு கல்வி தகுதி அதிகமாக இருந்தாலும் கல்லூரியில் பேராசிரியராகவும் அதே நேரத்தில் மாணவர்கள் தமிழை பிழை இல்லாமல் எழுதுவதற்கு சொல்லி கொடுத்துக் கொண்டிருப்பதாகவும்.மேலும் 60 நூல்களை எழுதி அதை விற்பனை செய்து கொண்டிருக்கின்றேன். பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்கள் கூட தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள் தேடி வந்து உதவி செய்ய முடியாது என்பதனால் அவர்களை தேடி அவருடைய பகுதிக்கு சென்று இதுபோன்ற இடத்தில் காலணிகளை துடைப்பதால் எனக்கு உதவி செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 100 ரூபாய் கூட மகிழ்ச்சியோடு எனக்கு வழங்குகிறார்கள். காலணிகளை துடைக்கும் போது அழுக்கு எப்படி நீங்குகிறதோ அதுபோன்ற அவர்களுடைய வாழ்க்கையில மகிழ்ச்சியும் கல்வியும் தானாக கிடைக்க வேண்டும் என்பது அடிப்படையில் பணியை செய்து கொண்டிருக்கின்றேன்.20 ஆண்டுகளாக தமிழ்நாடு பாண்டிச்சேரி ஆந்திரா கேரளா மும்பை என ஐந்து மாநிலங்களில் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றேன். இதற்காக 11 பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளார்கள் 576 விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளதாக தெரிவித்தார். இவ்வளவு படித்தவர் ஏன் காலணியை துடைக்கிறார் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த வேலையும் கேவலம் கிடையாது பன்னிரண்டாவது படித்துவிட்ட மாணவர்கள் இன்று நாம் பெரிய ஆள் என்று நினைக்கிறார்கள் நாம் எந்த நிலைக்கு இறக்கி போனாலும் அந்த அளவிற்கு நாம் முன்னேற முடியும் என்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காகவும் எந்த வேலையும் இந்த சமுதாயத்தில் கேவலம் கிடையாது என்பதை சொல்வதற்காகவும் இந்த பணியை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
2004 பள்ளிக்கூடம் தொடங்கி இன்று 2024 ஆண்டு வரை கிட்டத்தட்ட 21 ஆண்டுகளில் 1428 பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கியிருப்பதாகவும் . தற்பொழுது 239 பள்ளிகள் படிக்கிறார்கள் 178 பேருக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.