கலைஞரைப்பற்றி அவதூறாக பேசி சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைக்கும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். 11.07.2024 அன்று விடுதலை போராட்ட வீரர் மாவீரர் அழகு முத்துகோன் அவர்களின் 314-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்திட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக மக்களால் போற்றப்படுகின்ற தமிழ்நாடு முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி பாடல் உள்ளது. அந்த பாடலை நான் பாடுகிறேன் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் பார்க்கலாம் என்று கூறி “கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி, சண்டாளன் கருணாநிதி” என்று பாடலை பாடியுள்ளார்.
“சண்டாளன்” என்ற வார்த்தை பிணங்களை அப்புறப்படுத்தும் தாழ்ந்த பிறவி என்ற அர்த்தத்தில் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.. ஒரு மனிதனின் பிறப்பை இழிவுபடுத்தவே இந்த சண்டாளன் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருளை நன்கு உணர்ந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது அவதூறு பரப்பி, இழிவு செய்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தி அதன் மூலம் கலவரத்தை தூண்டவேண்டும் என்ற உட்கருத்தோடு பேசியுள்ளார்.
மேற்படி சீமான் அவர்களின் பேச்சு NEWS 18, POLIMER, VELICHAM, RAJ NEWS, DINA MALAR, INDIA TODAY போன்ற தொலைக்காட்சிகளிலும் மற்றும் அதனுடைய YouTube சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சீமான் அவர்களின் பேச்சு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
எனவே தமிழக மக்களால் போற்றப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி வேண்டுமென்றே “சண்டாளன்” என்ற வார்த்தையை பயன்படுத்தி, மக்களிளின் உணர்வுகளை புண்படுத்தி அதன்மூலம் கலவரத்தை தூண்டி சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…