கோவையில் ஒரு சில கல்லூரிகளுக்கு விடுமுறையே அளிக்கும் அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி?
கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. பருவமழை பொய்த்துப் போனதால் அணைகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. 50 அடி உயர நீர்த்தேக்கம் கொண்ட சிறுவாணி அணையின் நீர்மட்டம் 18.75 அடியாக சரிந்துவிட்டது. தினமும் 4 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இதேபோல் 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டமும் 63 அடியாக குறைந்துள்ளது. இதில் 40 அடிக்கு மண் சகதி தேங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், விவசாய தேவைக்கான தண்ணீர் இருப்பும் குறைந்து வருகிறது.
“செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்”- கண்ணீர் மல்க ஆவேசமாக பேசிய துரை வைகோ!
இதனிடையே, கர்நாடகா மாநிலம், பெங்களூரூவில் தண்ணீர் தட்டுப்பாடு பெரிய அளவில் இருப்பதால் சொந்த ஊர்களுக்கு பலர் திரும்பி வருவதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கோவையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் சில கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.