சேலத்தில் மாம்பழ வரத்து குறைந்ததால் வெறிச்சோடிய குடோன்கள்
சேலத்தில் மாம்பழ வரத்து குறைந்துள்ளதால் அங்குள்ள குடோன்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அது மட்டும் இன்றி சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரா, நடுசாளை, குண்டு, இமாம்பசந்த், நீலம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜனவரி மாதத்தில் மழை இல்லாத வறண்ட வானிலை கடந்த இரண்டு மாதங்களாக நீடிக்கும் கடும் வெயில் காரணமாக மாப்பிஞ்சுகள் காய்ந்து உதிர்ந்து விட்டன. இதனாலும் பூச்சி தாக்குதல் மற்றும் பருவம் தவறிய மழையால் மாவிளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குவியல் குவியல்களாக கொட்டி கிடந்த நிலை மாறி மாம்பழ வரத்து இல்லாததால் மாம்பழங்கள் இல்லாமல் குடோன்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
https://www.mugavari.in/news/tamilnadu-news/punishing-children-in-schools-should-be-prevented/2027
பொதுவாக இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் 50 சதவீதத்திற்கும் மேல் சரிந்ததால் விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் கவலையடைந்துள்ளனர்.