ஆவடி மாநகராட்சி விரிவாக்கம்; அதிகாரப் பூர்வ அறிவிப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆவடி மாநகராட்சி விரிவாக்கம்; அதிகாரப் பூர்வ அறிவிப்புஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சி 19 ஊராட்சிகளை இணைப்பதாக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சிக்கு அருகில் உள்ள கிராம உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன்படி கிராம ஊராட்சிகளை நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைப்பது தொடர்பாக இறுதி அறிக்கையை தமிழ்நாடு அரசு தயாரித்துள்ளது.

அந்த அறிக்கையில் ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சிகள் மற்றும் 19 கிராம ஊராட்சிகளை இணைக்கப்பட உள்ளது. அதன்படி திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் நகராட்சி மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சி ஆகிய 3 நகராட்சிகளை ஆவடி மாநகராட்சியுடன் இணைந்துள்ளனர்.

நெமிலிச்சேரி
நடுக்குத்தகை, காட்டுப் பாக்கம், சென்னீர்குப்பம் , வரதராஜபுரம், நசரத்பேட்டை, அகரம் மேல், பனவீட்டு தோட்டம், பரிவாக்கம், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி, கருணகரச்சேரி, மோரை, வெள்ளனூர், பாலவேடு, மேப்பூர், ஐயப்பாக்கம், அடையாளம் பட்டு, வானகரம் ஆகிய 19 ஊராட்சிகளை இணைத்து முதற்கட்ட அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகள் மற்றும் 196 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது.

 

ஆவடிக்கு மறுவாழ்வு தந்த முதல்வர் – இனிமேல் நாசர் இப்படி இருந்தால் நல்லது.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகராட்சிகளுடன் 24 பேரூராட்சிகள், 24 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளுடன் 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் அந்த கிராம ஊராட்சிகள் அனைத்தும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img