தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது – மக்கள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.51,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,370க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.50,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,455க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியானது கிராமுக்கு ரூ.60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.60-க்கும், கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.81,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.