தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்பு துறையில் புதிய whatsapp சேனல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது.
அந்தத் திட்டங்களை மக்கள் முழுமையாக அறிந்து பயனடையும் வகையில் ஏற்கனவே பேஸ்புக்,இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றம் youtube போன்ற சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த கட்ட முன்னெடுப்பாக டிஎன்டிஐபிஆர் கவர்ன்மெண்ட் ஆப் தமிழ்நாடு (TNDIPR,Govt.of Tamil Nadu) என்ற பெயரில் புதிய whatsapp சேனல் தொடங்கப்பட்டுள்ளது . மக்கள் லிங்கை கிளிக் செய்து , QR CODE – ஐ ஸ்கேன் செய்வதன் மூலம், மகளிா் உாிமைத்தொகை,முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.