spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

போதிய பயணிகள் இல்லை… சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

போதிய பயணிகள் இல்லை… சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் இன்று 5 வருகை விமானங்கள் மற்றும் 5 புறப்பாடு விமானங்கள் என 10 விமான சேவைகள், ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை, பெங்களுரு, மும்பை, அந்தமான், மதுரை ஆகிய இடங்களில் இருந்து வருகை தரும் 5 விமானங்களும், இதேபோல் மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இலங்கை, பெங்களுரு, மும்பை, அந்தமான், மதுரை ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் 5 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் புறப்பட்டு செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 11.20 மணிக்கு இலங்கை செல்லும் ஏர்இந்தியா விமானம், பகல் 1.20 மணிக்கு பெங்களூர் புறப்படும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.40 மணிக்கு பெங்களூரு செல்லக்கூடிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் பிற்பகல் 3.25 மணிக்கு மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் சென்னை விமான நிலையத்திற்கு காலை 7.05 மணிக்கு பெங்களூரில் இருந்து வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.05 மணிக்கு, மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், பகல் 1 மணிக்கு, அந்தமானில் இருந்து வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு, மதுரையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், மாலை 3.40 மணிக்கு, இலங்கையில் இருந்து வரும் ஏர்இந்தியா விமானம், ஆகிய 5 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

போதிய பயணிகள் இல்லாததாலும், விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்கள் காரணமாகவும் இன்று வருகை விமானங்கள் 5, புறப்பாடு விமானங்கள் 5 என மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img