வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்கு பெட்டிகளை அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மின்னணு வாக்கு பெட்டிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் சென்னையின் தேர்தல் அதிகாரி, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
சென்னையின் மூன்று தொகுதிகளுக்கும் மின்னணு வாக்கு பெட்டிகளை அனுப்பும் பணி இன்னும் சற்று நேரத்தில் துவக்கம்.
நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு பெட்டிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
சென்னையில் 16 இடங்களில் இருந்து மின்னணு வாக்கு பெட்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. சென்னை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வட சென்னையில் 254 வாக்குச்சாவடிகள், தென் சென்னையில் 456 வாக்குச்சாவடிகள், மத்திய சென்னையில் 192 என மொத்தம் 902 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டன.
வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள தலைமை அலுவலர் மற்றும் இதர அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படனர்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/process-from-mock-poll-to-completion-of-poll/1302
தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு மிஷின்கள், விவிபாட் மிஷின்கள் போன்றவை அனைத்துமே, வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சென்னை முழுவதும் 18,737 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.