சென்னை மந்தவெளி அருகே ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை பணிச்சுமையா? அல்லது வேறு காரணமா? திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணை.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி மின்சார( பறக்கும் ரயில் ) ரயில் சென்று கொண்டிருந்தது. மந்தைவெளி கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் ரயிலின் முன் பாய்ந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவான்மியூர் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நாவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (25)என்பதும், கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த விமல் ராஜ் சென்னை மாநகர ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
விமல்ராஜின் சடலத்தை கைப்பற்றிய ரயில்வே போலீசார், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா ,?அல்லது காதல் விவகாரமா? பெற்றோருடன் தகராறா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.