மலேசியாவிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட அரிய சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை கடத்திவந்த 2 நபர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிர பரிசோதனை கொண்டனர். அப்போது பெரிய பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்த சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.
இதனால், அவர்கள் வைத்திருந்த கூடைகளை பிரித்து சோதனையிட்டபோது, உள்ளே சிவப்பு காதுகளை கொண்ட நட்சத்திர ஆமைகள் ஏராளமாக இருந்தன. இதை அடுத்து இருவரையும் கைதுசெய்த சுங்க அதிகாரிகள், அவர்களிடம் இருந்த ஆமைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விமான நிலையத்திற்கு வந்த அதிகாரிகள, பறிமுதல் செய்யப்பட்ட சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை ஆய்வு செய்தனர். அதில் சுமார் 5 ஆயிரம் ஆமை குஞ்சுகள் உரிய ஆவணமின்றி சென்னைக்கு கடத்திவந்தது தெரியவந்தது.
இந்த சிவப்புக்காது நட்சத்திர ஆமைகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், வெளி நாட்டு நோய்கள், இங்குள்ள விலங்குகள், பறவைகளுக்கு பரவும் அபாயம் உள்ளதால் அவற்றை இன்று அதிகாலை விமானம் மூலம் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். மேலும் ஆமைகளை கடத்திய இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…