நக்கீரன் கோபாலுக்கு எதிராக வெறுப்பு பேச்சு வழக்கில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் மன்னிப்பு கேட்காததால் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா வழக்கை ஒத்தி வைத்தார்.
கடந்த மாதம் 27 ம் தேதி கோவையில் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதாக அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கர் பாலாஜி மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஓம்கர் பாலாஜி தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்ய ஓம்கர் பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு ஓம்கர்பாலாஜி நேரில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்று இல்லாமல் தானாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கப்பதாகத்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து திருத்திய மனுவை ஓம்கர் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யாமல் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து நீதிபதி, வழக்கை 19ஆம் தேதி ஒத்தி வைத்தார். இது தொடர்பாக அவருக்கு எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…