100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தற்போது ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தற்போது ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டம் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு தரப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசு உயர்த்தியது.

இதன்படி, தமிழகத்தில் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

இதன்படி, வரும் 2024-25 நிதி ஆண்டுக்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2023-24 நிதி ஆண்டுக்கு இந்த திட்டத்தின் கீழ் தினசரி ஊதியம் ரூ.294 வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தவிர்த்து, 2024 – 25ம் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்த 1229 கோடி ஒதுக்கீடு செய்தும் ஊரக வளர்ச்சி துறை அரசாணை வெளியீட்டுள்ளது.

Video thumbnail
அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?
00:50
Video thumbnail
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிச்சாமி
00:56
Video thumbnail
அதிமுக-பாஜக கூட்டணி | முதல் விக்கெட் அன்வர் ராஜா விலகினார்
00:58
Video thumbnail
அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்
00:32
Video thumbnail
நாடாளுமன்றத்திற்கு GoodBye சொல்லிட்டு வந்துட்டேன்
00:49
Video thumbnail
திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக இருக்கிறது
00:32
Video thumbnail
திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக இருக்கிறது | மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
05:16
Video thumbnail
சின்னத்திரை நடிகை ஆவடி காவல் ஆணையரிடம் புகார்.. பெரும் பரபரப்பு | Serial Actress | Avadi | Police
08:27
Video thumbnail
முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு?
01:08
Video thumbnail
அதிமுக-பாஜக கூட்டணி | முதல் விக்கெட் அன்வர் ராஜா விலகினார் | கலக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி
11:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img