சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒருநாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனையானது. வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,040-க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 54,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலையானது எந்த மாற்றமுமின்றி முந்தைய நாள் விலையில் (சனிக்கிழமை) விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,740-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.