சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையில் சவரனுக்கு ரூ.54,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள் தோறும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790-க்கு விற்பனை செய்யப்பட்டது நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.90.50-க்கும், கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையில் சவரனுக்கு ரூ.54,960 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 870 ஆக உள்ளது. தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறங்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவிதமாற்றமுமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் இல்லத்தரசிகளிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.