தூத்துக்குடியில் நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை தடுக்க நமக்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு கிடைக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு விளக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு ஆட்சி மாற்றத்தில் தான் உள்ளது எனவும் ஆட்சி மாற்றம் நிகழும் போது எல்லாம் நல்லதாகவே நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் மற்றும் வெளிநாட்டில் படிக்கும் கல்வி ஆலோசகர்கள் நடத்தும் 2024 கிற்கான ரஷ்ய கல்வி கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த கல்வி கண்காட்சியில் இந்தியாவில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகத்தின் அதிகாரி ஒலெக் அவ்தேவ், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் இயக்குநர் அலெக்சாண்டர் டோடோனோவ், பயோடெக்னாலஜி துறை தேசிய ஆராய்ச்சி அணு பல்கலைக்கழத்தின் பேராசிரியர் எலெனா சரபுல்ட்சேவா, Propaedeutics துறையின் இணைப் பேராசிரியர் விக்டோரியா நௌமோவா, பொது நோயியல் துறை, மருத்துவ சொற்களஞ்சியத்தின் இணை பேராசிரியர் திமூர் அக்மெடோவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , ”கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து இந்த கண்காட்சியை நான் தொடங்கி வைத்து வருகிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பான கேள்விக்கு, தேர்தல் நடத்தை விதிகள் இருப்பதால் எதையும் ஆய்வு செய்யவும், பெரிய அளவிலான கருத்துக்கள் தெரிவிக்கவும் முடியாத நிலையில் இருக்கிறேன். என்றாலும் இதற்கெல்லாம் ஒரே தீர்வு நீட் தேர்வில் இருந்து விளக்கு.
நீட் தேர்வுக்கு விளக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு ஆட்சி மாற்றம். ஆட்சி மாற்றம் நிகழும் போது எல்லாம் நல்லதாகவே நடக்கும் என கூறினார். கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுக்கு பதிலளித்து பேசிய அவர், பொது சுகாதாரத்துறை இன்றைக்கு மிகச் சிறப்பாக நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக எந்த ஒரு புதிய நோய் பாதிப்பாக இருந்தாலும் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைகளில் தீவிரமாக கண்காணிப்பு நடைபெற்று வருகிறது என மேலும் தெரிவித்தார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…