சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் காலை பொழுதில் மட்டுமே இரண்டு முறை உயர்ந்து புதிய உச்சம் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்வை நோக்கியே தங்கம் விலை பயணித்தது. இன்று அக்ஷய திரிதியை என்பதால் தங்கப்பிரியர்கள் தங்களால் இயன்ற ஏதேனும் ஒரு ஆபரணத்தை இன்று வாங்க வேண்டும் என கனவுடன் இருந்தவர்களுக்கு ஏமற்றம் தரும் வகையில் இன்று ஒரே நாளில் காலை பொழுதில் மட்டுமே இரண்டு முறை உயர்ந்து புதிய உச்சம் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
இன்று காலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.53,640க்கு விற்பனையானது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.6,705க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ1.30 உயர்ந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அடுத்தடுத்து ஏற்றத்துடனேயே காணப்பட்டது. அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்குவது ஒரு மரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது மக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.