இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் பலி
மெரினாவில் நண்பரின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு திரும்பிய போது நடந்த சோகம். இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனை ராஜாஜி சாலை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் நேற்று இரவு 10.30 மணியளவில் அதிவேகமாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் ஒரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு இளைஞர்கள் நிலை தடுமாறி அருகில் இருந்த சென்டர் மீடியனில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே தலையில் படுகாயம் அடைந்து பலியாகினர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடலையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
https://www.mugavari.in/mk-stalin-slams-modi-for-digital-robbery-in-new-india/
பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்கள் கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த அபிஷேக் 18 மற்றும் விவேக்(19) என்பதும் தெரிய வந்தது. நண்பர்களான இருவரும் நேற்றிரவு தங்களது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மெரினா விற்கு சென்று கேக் வெட்டி விட்டு திரும்பிய போது அதிவேகமாக வந்ததினால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.