ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட உள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 11 வீரர், வீராங்கனைகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டியை பார்வையிடவும் தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ச் சென்று இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு பயணத்தை முடித்து ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.