ஊடக துறையில் பெண்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற போராட வேண்டி உள்ளது
ஊடக துறையில் பெண்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு இன்றளவும் போராட வேண்டி உள்ளதாக மூத்த பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “இதழியலில் பெண்கள்” என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த பெண் பத்திரிகையாளர்கள் கவிதா முரளிதரன், சுகிதா சாரங்கராஜ், ஜெயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் பேசிய கவிதா முரளிதரன், இதழியல் (Journalism ) துறையில் பெண்கள் தங்களுடைய இடத்திற்கு தொடர்ந்து போராடும் நிலை உள்ளது என்றார். ஆங்கில ஊடகம் மற்றும் தமிழ் ஊடகங்கள் என அனைத்திலும் இது உள்ளது. இன்று பாஜக ஆதரவு நிலையில் பல ஊடகங்களில் உள்ளது. இதில் பல செய்தியாளர்கள் விருப்பம் இல்லாமல் தங்களின் சூழ்நிலை காரணமாக பணியாற்றுகின்றனர். தற்போது 70 சதவீதம் ஊடகங்களை கார்பரேட் நிறுவனங்கள் நிர்வாகிக்கிறது. மோடி மீண்டும் வந்தால் இது மேலும் அதிகரிக்கும். இன்றும் தமிழ் ஊடகங்களில் குறைந்த ஊதியத்தில் பணியாளர்கள் உள்ளனர்.
அதன் பின்னர் பேசிய சுகிதா சாரங்கராஜ், ஊடக துறையில் பெண்கள் உரிமைக்காக போராட வேண்டிய தேவை உள்ளது. பெரியார் மண்ணில் பெண்ணுரிமை என்பது பெரிய தோய்வு நிலையில் உள்ளது. முன்னணி ஊடகங்களில் செய்திகளை வழங்குவதில் நெறி தவறி செயல்படுகின்றன. இதற்காக தொடர்ந்து போராடி வருகிறேன். ஆணாதிக்கம் என்பது ஊடக துறையில் இன்றும் உள்ளது. நிர்வாகி ஆசிரியர் போன்ற பணிகளுக்கு பெண்களை தேர்வு செய்வது இல்லை. குறிப்பாக தமிழகத்தில் இது உள்ளது. ஒரு பிரச்சனை தீரும் வரையில் ஊடகங்கள் தொடர்ந்து அதனை செல்வது இல்லை. முழுமையான திட்டமிடல் இல்லாமல் செய்திகளை ஊடகங்கள் கொடுக்கிறது. பெண்கள் ஆண்கள் என பிரித்து பார்க்கும் ஊதிய பாகுபாடு அனைத்தும் வருத்தமளிக்கிறது என்றார்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஜெயராணி, ஊடக துறையில் பெண்கள் புறக்கணிப்பு பல காலமாக உள்ளது. தீண்டாமை குறித்து யாரும் பேச கூடாது என்று எல்லோரும் அமைதியாக உள்ளனர். ஏனென்றால் இதை அனைவரும் விரும்புகின்றனர். கட்சிகள் சாதி ரீதியில் தான் பதவிகளை வழங்குகிறது.
https://www.mugavari.in/news/cinema-news/raghava-lawrence-is-in-awe-of-vetrimaarans-story/1630
சாத்தான் குளம் மரணம் உயர் சாதியினருக்கு நடந்தது. ஆனால் தாழ்த்தப்பட்டோர் சிறை மரணம் பல நடக்கிறது. ஆனால் ஊடகங்கள் அங்கு வேறு விதமாக நடந்து கொள்கிறது. இது மாற வேண்டும் என்றார்.