வெற்றி மாறன் கதையை கேட்டு பிரமித்துப்போன ராகவா லாரன்ஸ்!
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ். கதிரேசன் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து ‘அதிகாரம்’ என்ற படத்தை தயாரிக்க உள்ளனர். இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்குப் பிறகு இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர். மேலும் பான் இந்தியா படமாக தயாராகும் இப்படம் பிரம்மாண்ட பொருட்செளவில் தயாராகிறது.
படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பது விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
Hi friends and fans, I’m blown away after the narration from Vetri Maaran Sir of adhigaram’s shooting script. I’m extremely happy and excited that I got an opportunity to work on a grandiose film written by Vetri Maran sir. I can't wait to start working on this project after the… pic.twitter.com/pA8fEUYSHp
— Raghava Lawrence (@offl_Lawrence) April 21, 2024
இந்த நிலையில் படத்தின் முழு கதையையும் இயக்குநர் வெற்றிமாறன், ராகவா லாரன்ஸ் இடம் கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘அதிகாரம்’ படத்தின் திரைக்கதையை கேட்டு பிரமித்துப்போனேன். வெற்றிமாறன் எழுதியுள்ள பிரமாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளேன்.
https://www.mugavari.in/news/cinema-news/actor-rajinikanth-congratulates-manjummal-boys-team/470
ஏற்கனவே அறிவித்த இரண்டு படத்திற்கு பிறகு இப்படத்தின் பணிகளை தொடங்குவதற்கு காத்திருக்க முடியவில்லை. இந்த அருமையான கதையை எனக்கு அளித்த வெற்றிமாறனுக்கு நன்றி. தயாரிப்பாளர் கதிரேசனுக்கு நன்றி அனைவரது ஆசிர்வாதமும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.